மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் சாலையில் அமைந்துள்ள ஓம் டியூஷன் சென்டரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஓம் டியூஷன் சென்டரின் நிறுவனர் டி. சரவண குமார் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவன் விமல் மற்றும் பள்ளி மாணவி திருமகள் ஆகியோரின் தந்தையும், உதவி இயக்குநரும் நடிகருமான திருநாவுக்கரசு, திரைப்பட இயக்குநரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகரும், சேவா ரத்னா விருது பெற்றவருமான டாக்டர் ஜெ. விக்டர், ஜோதிடர் திருப்பதி ஆகியோர் இணைந்து நிறுவனர் டி. சரவண குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கல்விப் பணியுடன் சமூக சேவையிலும் சிறந்து விளங்கும் நிறுவனர் டி. சரவண குமார், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து ஆற்றி வரும் பணிகள் குறிப்பிடத்தக்கவை.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஓம் டியூஷன் சென்டரின் 25 ஆண்டுகால கல்விப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இவ்விழா சிறப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நிறைவடைந்தது.