பெயர் விலாசம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி இபி ரோடு பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவலர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதியவர் உயிர் காக்க உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சிராப்பள்ளி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். சிகிச்சை சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

முதியவர் மயங்கி கிடந்த சம்பவ இடத்துக்குச் சென்று காவலர்கள் விசாரிக்கையில், முதியவர் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் யாசகம் கேட்டு உண்டு, தெருவோரங்களிலும் பூட்டிய கடைகள் முன்பு உறங்கியும் ஆதரவற்று வாழ்ந்து வந்துள்ளார். இறந்தவர்க்கு எந்த ஒரு உறவினர்களும் இல்லாமல் இருந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும் முதியவர் இறப்பில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்பதை தெரிந்து கொண்டனர். முதியவர் உடலை யாரும் உரிமை கோரப்ப்படாத நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவலர் ராஜா தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் காவலர் ராஜா முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *