தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் வரை தொடர் விபத்துகள் ஏற்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையோர மணல் திட்டுகளை அகற்றவும், வேகத்தடைகள் அமைக்கவும், இரவு நேர வெளிச்சத்திற்காக நான்கு ஹைமாஸ் விளக்குகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பேரிகார்டுகள் அமைத்தல், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்தல், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். உடனடி நடவடிக்கை எடுத்த மேயருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.