கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரம் வீரராக்கியத்தில் அமைந்துள்ள சுவாதி திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கிருஷ்ணராயபுரம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வ. குரள் செல்வி, மாவட்ட திட்ட அலுவலர் (பொறுப்பு), ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், கரூர் பா. செல்வி, கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் து. வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சத்யா, கர்ப்பிணிப் பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நிகழ்வை நடத்தி வைத்து, அவர்கள் அனைவருக்கும் வளைகாப்பு சீர்வரிசை மற்றும் தாம்பூலப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.