திருவாரூர் சுந்தரவிளாகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (அக். 29) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.விநாயகப் பெருமானுக்கு உகந்த வழிபாட்டு நாட்களில் ஒன்றாக சங்கடஹர சதுர்த்தி போற்றப்படுகிறது.
இந்நாளில் விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி, துன்பங்கள் அகன்று, நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.இதையொட்டி, திருவாரூர் சுந்தரவிளாகம் அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.