புதுச்சேரி, வில்லியனூர்:

புதுவை வில்லியனூரில் உள்ள தியாகி அ. முத்துக்குமாரசுவாமி அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளியில் நேற்றும் இன்றும் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் ஜோன்-5க்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனப் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியை மாநிலத் திட்டக்குழு இயக்குநர் திருமதி K. எழில் கல்பனா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சாலமன் டேவிட் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் A. புவியரசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர் திருமதி V. லட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று நடனம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, நமது பாரம்பரிய கிராமியக் கலைகளை நினைவூட்டும் வகையில் நடைபெற்ற பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையிலும், நமது பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *