தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், அக்- 29. தஞ்சாவூர் பிரம்மாண்டமாக தாமரை அட்வான்ஸ்டு ரீஹேப் சென்டர் துவங்கி உள்ளது. நரம்பியல் மறுவாழ்வு எலும்பு மற்றும் மூட்டு மறுவாழ்வு சிகிச்சை, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வு சிகிச்சை, குழந்தைகள் மறுவாழ்வு சிகிச்சை முதியோர் மறுவாழ்வு சிகிச்சையை செய்து வருகிறார்கள்.

புதியதாக தாமரை அட்வான்ஸ்டு மறுவாழ்வு மையம் மாதாக்கோட்டைரோடு 93, காவேரி வளாகத்தில் அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் ராஜ்குமார், பார்கவி ஆகிய தலைமை தாங்கினர். டாக்டர் மகேஷ், டாக்டர் கௌசல்யா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். வேலூர் ஆயர் அம்புரோஸ் திறந்துவைத்தார். இதையடுத்து தஞ்சாவூர் ஆயர் சகாயராஜ் தாமரை அட்வான்ஸ்டு ரீஹேப் சென்டரை ஆசீர் வதித்து பேசினார். மறை மாவட்ட தலைமை குரு ஜோசப் ஜெரால்டு முன்னிலை வகித்தார், மனிதநேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ் ராஜ்குமார் கலந்து கொண்டார்.

இந்த புதிய தாமரை அட்வான்ஸ்டு ரீஹேப் சென்டரில் சிறப்பு சிகிச்சை யாக நரம்பியல், எலும்பு மற்றும் மூட்டு மறுவாழ்வு சிகிச்சை, முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மறுவாழ்வு சிகிச்சை, உளவியல், உணவு முறை ஆலோசனை போன்ற பல சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளான நபர்கள் மீண்டும் இயங்க, மீண்டும் தன் நம்பிக்கையுடன் வாழ ஆரோக்கியமான வாழ்க்கைப் பயணத்தில் புதிய நம்பிக்கையை கொடுக்கிறார்கள்.

தஞ்சாவூர் பல்நோக்கு சமூக சேவை சங்கத்தின் செயலாளரும் பொருளாளருமான குழந்தைசாமி, டாக்டர்கள் நிகேஷ், அருணா, எடிக்தா, கரன்சியா, இன்ஜினியர் வீரரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அற்புதராஜ், மாதா டெக்கரேஷன் செல்வா ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *