அரியலூர்: தமிழகத்தில் வண்ணார் உள்ளிட்ட சிறு, குறு சமூகங்களை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலத் தலைவர் கே.பி. மணிபாபா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

ஏற்கனவே எம்.பி.சி. பட்டியலில் வண்ணார் சமூகத்தினர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் நாவிதர், ஓட்டர், குலாளர், போயர், இசை வேளாளர் உள்ளிட்ட சிறு, குறு சமூகங்களை ஒருங்கிணைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தமிழக அரசு விரைவில் உருவாக்க வேண்டும்.

மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வண்ணார் உள்ளிட்ட சிறு, குறு சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

துணி துவைத்து தேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மின்சார துணி தேய்ப்புப் பெட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வண்ணார் பேரவைத் தலைவர் கே. கலையரசன், மாவட்டச் செயலாளர் எம். விக்னேஸ்வரன், மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பச்சமுத்து, திருச்சி மாவட்டச் செயலாளர் முருகேசன், கடலூர் மாவட்டச் செயலாளர் பாலமுருகன், அரியலூர் ஒன்றியச் செயலாளர் ராஜலிங்கம், மாவட்ட ஆலோசகர் மணிமாறன், ஆலத்தூர் ஒன்றியத் தலைவர் ஆர்.கே. பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்து!

இதனைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட வண்ணார் பேரவைத் தலைவர் கே. கலையரசன் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலத் தலைவர் கே.பி. மணிபாபா கலந்து கொண்டார். அங்கு மணமக்கள் முத்துசாமி – வினோதினி ஆகியோரை வாழ்த்தினார்.

அரியலூருக்கு வருகை தந்த மாநிலத் தலைவர் கே.பி. மணிபாபாவுக்கு மாவட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *