சென்னை, காவாங்கரை:

சென்னை காவாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு கலை நிகழ்ச்சி அமைப்பு சார்பில் ‘தமிழ் பரதரத்தின சிகரம்’ என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நடனப் பயிற்சி குழுமங்களில் இருந்து 133 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான பரதநாட்டியத்தைப் போற்றும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தான ‘நீராரும் கடலுடுத்த’ பாடலுக்கு தலா ஒரு நிமிடம் தனித்தனியாக நடனமாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

133 கலைஞர்களும் ஒரே நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்தியது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் பாரம்பரியக் கலையான பரதநாட்டியத்தின் சிறப்பையும் உலகறியச் செய்யும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது.

தொடர்ந்து, இந்நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு நடனக் குழுமத்தின் ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு கலை நிகழ்ச்சி அமைப்பின் சார்பில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், உலக சாதனை நிகழ்வில் பங்களித்த ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களுடன் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

அதேபோல், உலக சாதனை நிகழ்த்திய 133 பரதநாட்டிய கலைஞர்களுக்கும் தமிழ்நாடு கலை இலக்கிய அமைப்பின் தலைவர் மணிகண்டன் மற்றும் துணைத் தலைவர் வனிதா ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினர்.

தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையையும், தமிழர்களின் தொன்மையான கலை மரபான பரதநாட்டியத்தையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு கலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *