புதுச்சேரியில் உள்ள DR KIMS Competitive Aspirants Academy-யின் Academic கல்லூரியில், யுவா சம்பர்க் (Yuva Sampark) சார்பில் “ஜனநாயகத்தைக் காப்போம்! கும்பல் ஆதிக்கத்தை வேரறுப்போம்!” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜனநாயகத்தின் முக்கியத்துவம், அதன் மாண்புகளையும் அடிப்படை விழுமியங்களையும் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் சமூகத்தில் இளைஞர்களின் பங்கு, பொறுப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொறுப்பாளர் திரு. வெற்றிச்செல்வன் மற்றும் Viksit Bharat 2047 அமைப்பின் மாநிலப் பொறுப்பாளர் திரு. சக்திவேல் ரௌத்திரம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.