காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட பொருளாளர் வீ. வள்ளிநாயகம் அவர்களின் தந்தை சி.எம். வீரமணி அவர்களின் திருவுருவப் படத் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கலந்து கொண்டு, சி.எம். வீரமணி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாநில போக்குவரத்துப் பிரிவு துணைத் தலைவர் மனோகரன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் வி.ஆர். மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறிப் பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் எம்.எம். மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பகுதி கழகச் செயலாளர்கள் கே.யு.எஸ். சோமசுந்தரம், பாலாஜி, ஜெயராஜ், கோல்டு ரவி, ஒன்றிய கழகச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், பொதுக்குழு உறுப்பினர் ஒ.வி. ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உதயராமலிங்கம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் தமிழ் வாணன், வெற்றி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் தியாகராஜன், மாவட்ட பாசறை துணைச் செயலாளர் நிர்மல்குமார், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் காமேஷ் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதேபோல், பகுதி கழக துணைச் செயலாளர்கள் கபாலி, சரண் ஜீவா, பகுதி கழக அம்மா பேரவைச் செயலாளர் வரதராஜன், வட்டச் செயலாளர்கள் வாசு, சிவகுமார், அம்மா பாலு, அஸ்வின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *