மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
மறவபட்டி மற்றும் தெத்தூர் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சி செயலர் முத்துக்குமார் கலந்து கொண்டு தீர்மான நகல்களை வாசித்தார்.
அதேபோல் கொண்டையம்பட்டி ஊராட்சியில் ராஜேஷ், எர்ரம்பட்டி ஊராட்சியில் ராஜங்கம், தேவசேரி ஊராட்சியில் அழகுமீனா, சின்னஇலந்தைகுளம் மற்றும் கல்லணை ஊராட்சிகளில் ஸ்டாலின், கல்வேலிபட்டி ஊராட்சியில் செல்வம், அய்யங்கோட்டை ஊராட்சியில் ராஜா, வாவிடமருதூர் மற்றும் மேட்டுப்பட்டி ஊராட்சிகளில் தாய்மொழி, அச்சம்பட்டி ஊராட்சியில் முருகேஸ்வரி, முடுவார்பட்டி ஊராட்சியில் செல்வமூர்த்தி, மாணிக்கம்பட்டி ஊராட்சியில் பெரிச்சி, வெள்ளையம்பட்டி ஊராட்சியில் தம்பிதுரை, கோடாங்கிபட்டி மற்றும் பாரைப்பட்டி ஊராட்சிகளில் மாணிக்கம், சேந்தமங்கலம் மற்றும் பொந்துகம்பட்டி ஊராட்சிகளில் ஆண்டிச்சாமி, வலையபட்டி மற்றும் அ.கோவில்பட்டி ஊராட்சிகளில் தெய்வேந்திரன், குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சியில் சுவிதா, பெரியஇலந்தைகுளம் மற்றும் மேலசின்னணம்பட்டி ஊராட்சிகளில் போஸ், வடுகபட்டி ஊராட்சியில் பங்கஜவள்ளி, அழகாபுரி மற்றும் கோட்டைமேடு ஊராட்சிகளில் பாலமுருகன், மேட்டுப்பட்டி ஊராட்சியில் அபிமன்யு உள்ளிட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கிராம சபைத் தீர்மானங்களை வாசித்தனர்.
கூட்டங்களில் அரசு பள்ளிக் கட்டிடங்களை மேம்படுத்துதல், தார் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் வாய்க்கால்கள் அமைத்தல், குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்பு, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து வழங்குதல், கிராமங்களில் பூந்தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, மோகன்ராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னணன், பிச்சைமணி, ஜெபராஜ், மாசிலாமணி மற்றும் ஒன்றிய அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.