ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
நவம்பர் 1-ஆம் தேதி இன்று உள்ளாட்சி தினமாக (Local Bodies’ Day) கொண்டாடப்படுகிறது.இன்று மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பொம்மிடி.துறிஞ்சிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சியிலுள்ள வார்டுகளில் சுழற்சி முறையைப் (Rotational system) பின்பற்றி,மார்க்ரேட்.வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் சக்திவேல் கால்நடை மருத்துவர் கிராம நிர்வாக அலுவலர் மணி த.வெ.க ஒன்றிய செயலாளர் செல்வம் சுய உதவி குழுவினர் தூய்மை பணியாளர்கள் ஊராட்சி செயலர் G.முத்து மற்றும் பொம்மிடி நடூர் காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஊராட்சியின் பொது நிதி செலவினங்கள் மற்றும் தணிக்கை (Audit) அறிக்கை சமர்ப்பித்து
டெங்கு மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன
மேலும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கான தகுதியான பயனாளிகள் தேர்வு செய்து கிராம மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தனர்