கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலய அரங்கில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்மொழியின் வளர்ச்சி, கல்வி, அரசு நிர்வாகம் மற்றும் வாழ்வியல் நடைமுறைகளில் தமிழின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்படி, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 60 விழுக்காடு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

1,130 திருக்குறள்களையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி மலையில் கல்வெட்டுகளாகப் பொறிக்க விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.மேலும், அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும் துறை சார்ந்த ஆணைகள், திட்டங்கள், தீர்மானங்கள் உள்ளிட்ட அரசு நிர்வாகம் தொடர்பான அனைத்தும் தமிழ்மொழியில் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உலகத் தமிழ்க் காப்பு கூட்டியக்கமும் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து, பேரவைத் தலைவர் செ. துரைசாமியின் பவள விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட மலரை வெளியிட்டன.தமிழ்மொழியின் பயன்பாட்டை கல்வி, அரசு நிர்வாகம் மற்றும் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளில் முழுமையாக விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *