நவம்பர் 1-ஆம் தேதி இன்று உள்ளாட்சி தினமாக (Local Bodies’ Day) கொண்டாடப்படுகிறது.இன்று மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
நவம்பர் 1-ஆம் தேதி போதக்காடு ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியிலுள்ள வார்டுகளில் சுழற்சி முறையைப் (Rotational system) பின்பற்றி குமரேசன் சாலை ஆய்வாளர் தலைமையில் நவநீதகிருஷ்ணன் மருத்துவ துறை மணிவேலன் TNEB போதக்காடு ஊராட்சி செயல் அலுவலர் குணசேகரன் மகளிர் சுய உதவி குழுவினர் தூய்மை பணியாளர்கள் பொம்மிடி நடூர் காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஊராட்சியின் பொது நிதி செலவினங்கள் மற்றும் தணிக்கை (Audit) அறிக்கை சமர்ப்பித்து டெங்கு மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன மேலும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கான தகுதியான பயனாளிகள் தேர்வு செய்து கிராம மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தனர்
மேலும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்