கோவை
டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தனிஷ்க் , வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளைப் பரிமாற்றம் செய்து புதிய நகைகளை வாங்குவதற்கு ஏதுவாக, சிறப்புத் தங்கப் பரிமாற்றச் சலுகையை அறிவித்துள்ளது. *20 % வரை செய்கூலி தள்ளுபடி மற்றும் கிராமுக்கு ரூ.301 தள்ளுபடி அறிவிப்பு .
இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும்போது, அதன் மதிப்புடன் கூடுதலாக ஒரு காரட் மதிப்பைப் பெறலாம். தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை, 2026 நவம்பர் 8-ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்தச் சலுகையின் கீழ் தங்க நகைகள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகளை வாங்கலாம்.
உதாரணமாக, வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 20 காரட் மதிப்புடைய பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும்போது, அதன் மதிப்பைக் கணக்கிடுவதில் கூடுதலாக ஒரு காரட் மதிப்பு சேர்க்கப்பட்டு, 21 காரட் மதிப்பிற்கான பலனைப் பெறலாம். தனிஷ்க் நிறுவனத்தில் மட்டுமின்றி, பிற நகைக்கடைகளில் வாங்கிய பழைய தங்க நகைகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் பரிமாற்றம் செய்யலாம். பழைய மற்றும் உடைந்த தங்க நகைகளையும், வாங்கியதற்கான ரசீது இல்லாமலும் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. 9 காரட் முதல் பல்வேறு தூய்மை நிலைகளைக் கொண்ட தங்க நகைகளைப் பரிமாற்றத்திற்குக் கொண்டுவரலாம்.
இந்தியக் குடும்பங்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதில் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நாட்டின் தங்கத் தேவையில் சுமார் 99 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்பாடின்றி இருக்கும் தங்கத்தை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவருவதன் மூலம், தங்க இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சிக்கும் இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது.
தங்கப் பரிமாற்ற நடைமுறையில் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் அளிக்கும் வகையில் தனிஷ்க் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பழைய தங்கத்தை எடைபோடுவது, அதன் தூய்மையைச் சோதிப்பது, உருக்குவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தங்கத்தின் தூய்மை நவீன காரட்மீட்டர் கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. அனுபவமிக்க தங்க நகைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தச் செயல்முறையை மேற்கொள்கின்றனர். மேலும், தங்கத்தின் வாங்கும் மற்றும் விற்பனை விகிதங்கள் ஒரே மாதிரியாக இருப்பதுடன், பரிமாற்றத்தின்போது மறைமுகக் கழிவுகளும் கிடையாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய நகைகளைப் புதிய வடிவமைப்புகளைக் கொண்ட நகைகளாக மாற்றிக்கொள்ளலாம். திருமணத்திற்காக நகைகள் வாங்குவோர், குடும்பப் பாரம்பரியத் தங்க நகைகளைப் புதிய வடிவமைப்புகளாக மாற்ற விரும்புவோர் மற்றும் சமகால நகை வடிவமைப்புகளை விரும்புவோர் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
தங்க நகைகள், தென்னிந்தியக் குந்தன், குந்தன் போல்கி, வண்ணக் கற்கள் பதித்த நகைகள் மற்றும் இயற்கை வைர நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நகைத் தொகுப்புகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். திருமணம், பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் போன்ற சிறப்புத் தருணங்களுக்கு புதிய நகைகளை வாங்க விரும்புவோருக்கும் இந்தச் சலுகை வாய்ப்பாக அமையும்.
தனிஷ்க் நிறுவனத்தின் அனைத்து விற்பனையகங்களிலும் இந்தத் தங்கப் பரிமாற்றத் திட்டம் நடைமுறையில் உள்ளது. பழைய தங்கத்தின் மதிப்புடன் கூடுதல் ஒரு காரட் மதிப்பைப் பெறும் இந்தச் சிறப்புச் சலுகை, 2026 நவம்பர் 8-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.
இந்தச் சிறப்புத் தங்கப் பரிமாற்றச் சலுகை குறித்து கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார வணிக மேலாளர் சந்திரசேகர் கோவைப் பகுதி வணிக மேலாளர்கள் நவீன், சிவரஞ்சனி மற்றும் பிரான்சைசி பார்ட்னர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சலுகையின் சிறப்பம்சங்கள் மற்றும் பரிமாற்ற நடைமுறைகள் குறித்து விளக்கினர்.