காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள அப்போலோ மருத்துவமனை சென்னை தகவல் மையத்தில்,அப்போலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோயாளிகளுக்கான சிறப்பு கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.


இதில் மூத்த கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஹரிஷ் குமார் பங்கேற்று, புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், சிகிச்சை முறைகள், வலி நிவாரணம் மற்றும் மனநலப் பராமரிப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.


மேலும் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள், கட்டிகள், தொடர் இருமல், குரல் மாற்றம், காரணமற்ற ரத்தப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


புற்றுநோய் உள்ளவர்களுக்கு ரேடியேஷன் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கும் போது அவர்களுக்கு எந்த விதமான பக்கவிளைவோ, வலியோ, அவர்கள் உணரும் அளவிற்கு இந்த மருத்துவ சிகிச்சை இருக்காது. சிலருக்கு முடி கொட்டுதல் ஏற்படும் என அச்சத்தில் இருப்பார்கள் அதுவும் மூளையில் ஏற்படும் ஒரு சில புற்று நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் போது முடி கொட்டுதல் ஏற்படும் மற்ற எல்லா புற்று நோய்களுக்கும் அவை ஏற்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை. புற்றுநோய் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் 75% ரேடியேஷன் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அவை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு நாளைக்கு ஒரு முறை என வாரத்திற்கு ஐந்து முறை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். புற்றுநோயின் அறிகுறிகளில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட அறிகுறி உள்ள புற்றுநோய்களை ரேடியேஷன் மூலமாக முற்றிலமாக குணப்படுத்தி விடலாம் எனவும் தெரிவித்தார்.

புற்றுநோயில் மூன்றாம் கட்டப் பகுதியில் 45 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும் புற்றுநோய் பரவாமல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். ரேடியேஷன் மூலம் புற்றுநோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாமல் புற்றுநோய் கட்டியை மட்டும் குணப்படுத்தி முடியும் இதற்கு முன்னர் ஊசி மூலமாக மருந்து செலுத்தும் போது புற்றுநோய் செல்கள் மட்டுமல்லாது சாதாரண செல்களும் அழிந்துவிடும் நிலை இருந்தது தற்சமயம் ரேடியேஷன்கள் பல்வேறு விதமான ரேடியேஷன்கள் ஆக்கபூர்வமான மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்துவதால் ஐந்து வாரம் என்பது போக ஐந்து நாட்கள் அளித்தால் போதும் என்ற அளவிற்கு மருத்துவ சிகிச்சை செய்ய மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *