தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் ல் பணம் எடுக்கச் சென்ற வங்கி பயனாளர் ஒருவர் ரூபாய் 3000 / – பணத்தினை தனது வங்கி கணக்கில் இருந்து எடுப்பதற்காக ஏடிஎம் மிஷினில் பதிவு செய்துவிட்டு பணத்தினை எடுக்காமல் சென்று விட்டார்.
இதனால் ரூபாய் 3000 பணமானது கனரா வங்கி ஏடிஎம்மில் கேட்பாரற்று இருந்துள்ளது. இந்நிலையில் மேற்கண்ட ஏடிஎம் ற்கு பரிவர்த்தனைக்காக சென்ற பத்திரிகையாளர்கள் அவற்றைப் பார்த்து, கேட்பாரற்று இருந்த பணம் ரூ 3000/- ஐ எடுத்துச் சென்று பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் நல்லு அவர்களிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து
டி எஸ் பி நல்லு அவர்களின் வழிகாட்டுதலின் படி பத்திரிகையாளர்கள் பெரியகுளம் போலீசாரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.ஏடிஎம் ல் இருந்து பணத்தை எடுக்காமல் சென்ற வங்கி பயனாளர் உரிய ஆவணங்களுடன் பெரியகுளம் காவல்நிலையத்தில் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாய் பத்திரிகையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கனாரா வங்கி ஏடிஎம் ல் கேட்பாரற்று கிடந்த பணத்தை எடுத்து காவல் துறையில் ஒப்படைத்த பத்திரிகையாளர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.