பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம், ஜல்லிப்பட்டி, சருத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பாவை பவுண்டேஷன் சார்பில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் லட்சுமிபுரம் ஊராட்சி செயலர் டி. லெனின், ஜல்லிப்பட்டி ஊராட்சி செயலர் ஜெ. நந்தினி, சருத்துப்பட்டி ஊராட்சி செயலர் மு. செல்லப்பாண்டி உள்ளிட்ட ஊராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட பாவை பவுண்டேஷனின் இந்தச் செயல் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.