எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல்துறை சார்பாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசூரில் இருந்து சீர்காழி காவல் நிலையம் வரையிலான 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சீர்காழி காவல் துறையினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற முதல் ஆண்கள்,பெண்கள் பிரிவில் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்களுக்கு பேருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தமிழ் தர்ஷிகா 5 கிலோமீட்டர் தூரத்தையும் சிறு சோர்வின்றி ஓடி கடந்து வந்தார்.
அவரது தாயாரும் இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை உற்சாகப்படுத்தியவாரே உடன் வந்தார். இதனை தொடர்ந்து குழந்தையை பாராட்டி கொஞ்சிய காவல்துறையினர் சிறப்பு பரிசு வழங்கினர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் காவல் ஆய்வாளர்கள் கமல்ராஜ் புயல் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்