தர்மபுரி மாவட்டம் கடத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் தலைமையில் நேற்று கடத்தூர் பகுதியில் செயல்படும் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு நிறுவனங்களில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி திடீர் ஆய்வு செய்தார்.

தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு, காரம் போன்ற உணவுப் பொருட்கள் தேவை அதிகமாக இருப்பதால், அதனை தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்படுகிறதா..? என்றும், சரியான அளவில் வண்ணங்கள் சேர்க்கப்படுகிறதா..? என்றும், பழைய சமையல் எண்ணெய் திரும்பத் திரும்ப உபயோகப்படுத்தப்படுகிறதா..? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத மற்றும் சுகாதாரமற்ற முறையில் இனிப்பு காரம் தயாரித்த இரண்டு நிறுவனங்களுக்கு ரூபாய் 5.000 அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் 3 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கெட்டுப்போன இனிப்பு 2 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *