ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தர்மபுரி மாவட்டம் அரிசி பருப்பு எண்ணெய் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவாச பொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசையும் தமிழக அரசையும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடத்தூர் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தனுஷின் வட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மல்லிகா வஞ்சி சேகர் அம்ப்ரோஸ் பொருளரசன் விவேகானந்தன் கண்டன உரையாற்றினார்கள்
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனோகரன் கிருஷ்ணவேணி கண்ணகி குப்பன் இளவரசி விவேகானந்தன் வரதராஜன் தங்கம் பொன்னுசாமி, சென்னகிருஷ்ணன் பெருமாள் வினோத் ராக பிரியா குமரேசன் முருகன் நடராஜ், செல்வம் கணேசன் சொக்கலிங்கம் ரங்கசாமி சாவித்திரி போன்றவர்கள் கலந்து கொண்டனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் விவரம்.அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்திடு.பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை குறைத்திடு.ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தடை இன்றி வழங்கிடு.மின்சார கட்டண உயர்வை கட்டுப்படுத்திடு.ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார்.