தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குரூப்-4 தேர்வு காலிப்பணியிடத்தை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்
அமைச்சரிடம் தேர்வர்கள் மனு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டி.என்.பி.எம்.சி. குரூப்-4 தேர்வு எழுதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள், மனிதனை மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழியை தாராபுரத்தில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பாரியாளர் தேர்வு வாரியம் நடத்தும் ‘குரூப்-1 தேர்வு மூலம் சாதாரணமாக 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால் இந்த ஆண்டு இந்த தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்கள், உதவியாளர்கள், வாக்காப்பாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு, 4 ஆயிரத்து 662 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.

குரூப்-4 தேர்வுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் படித்து வருகின்றனர். தற்போது காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவாக அறிவிக்கப்பட்டிருப்தால் எழுத்துத்தேரவில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தால் கூட பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணில் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக அரசு குரூப்-4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *