அலங்காநல்லூர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூ.வீ.கருப்பையா, கலந்து கொண்டு வேஷ்டி, சட்டை, சேலை, மற்றும் இனிப்பு வழங்கினார் தொடர்ந்து அவர் பேசியது தமிழக முதல்வர் தளபதி ஜோசப்விஜய் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது


லஞ்ச லாவண்யம் இல்லாமல் ஒரு முன்மாதிரியான அரசு தமிழகத்தில் நடைபெறுகிறது .ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை காக்க எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.இதில்அலங்காநல்லூர் தவெக ஒன்றிய செயலாளர்கள் விஜய்ஹரிஷ்,கிருஷ்ணமூர்த்தி,நகரச் செயலாளர்கள் தளபதிரஞ்சித்,புகழ்பாஸ்கரன்,
சோழவந்தான் மாவட்ட மகளிரணி அமைப்பாளர்தேவசுஜிதா (எ) சுஜா,வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் தனசேகரன், கார்த்திக், தர்மராஜா,இணைச்செயலாளர் முத்துமுன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலாஜி, வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் தமிழன்தாமு,வழக்கறிஞர்தியாகு, மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணகண்ணன்,நிர்வாகிகள் ராமநாதன், கிருஷ்ணமூர்த்தி,பாண்டுரங்கன், வீரணன்,மகளிரணி லெட்சுமி, உள்பட ஒன்றிய நகர கிளைக் கழக மற்றும் மகளிரணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *