அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளையின் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் அரசு பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டியின் அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவல் சார் துணைத் தலைவர் இரா இராஜவேல் அவர்கள் தேர்தல் அலுவலராக கலந்து கொண்டார்
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட செயலாளர் ஆ சண்முகம் வரவேற்று பேசினார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவல் சார் துணைத் தலைவர் அவர்கள் தேர்தல் அலுவலராக செயல்பட்டு தேர்தலை நடத்தினார் நிர்வாக குழு உறுப்பினர்கள் செ ஜெயராமன் இ எழில் ஆ சண்முகம் முஅசோக்குமார் அ நல்லப்பன் துரை செல்வராஜு எஸ்எம் சந்திரசேகர் கு காமராஜ் க செல்வராஜ் ம ரமேஷ் இரா வேல்மணி பா சண்முகவேல் மு.சுரேஷ்குமார் இரா பத்மாவதி த சிவமூர்த்தி ஆகியோரால் மாவட்ட தலைவர் மற்றும் மாநில மேலாண்மை குழு உறுப்பினராக செ ஜெயராமன் மாவட்டத் துணைத் தலைவர் இ எழில் மாவட்ட செயலாளர் ஆ சண்முகம் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்
மாவட்ட பொருளாளர் பதவிக்கு இருவர் போட்டியிட்ட நிலையில் அதிக வாக்குகள் அடிப்படையில் மாவட்ட பொருளாளராக முஅசோக்குமார் தேர்வு செய்யப்பட்டார் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கு தேர்தல் அலுவலர் அவர்களால் உறுதிமொழி ஏற்பு செய்யப்பட்டது வெற்றி பெற்றவருகளுக்கு அனைவருக்கும் நிர்வாக குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்