தென்காசி நவம்பர் 7-
தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபாண்டியபுரம் விளக்கு அருகே அடையாளம் தெரியாத பெண் உடல் முற்றிலும் தீயால் எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெண் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறப்பிற்கு காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக இறப்பில் சந்தேகம் இருந்து வந்த நிலையில் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் I.P.S., உத்தரவின் பேரில் ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தனிப்படையினர் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் துரிதமான விசாரணை மற்றும் தொடர் தேடுதல் நடவடிக்கையின் மூலம் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 03 குற்றவாளிகளை கைது செய்தனர்.
கொலை குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்து விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினரை பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்