தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் உட்கோட்டம், ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்கம்பாளையத்தில் உள்ள பழமையான மாகாளியம்மன் கோயிலில் கடந்த அக். 30-ம் தேதி மர்ம நபர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து, ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை மற்றும் இரண்டு அடி உயரமுள்ள பித்தளை குத்துவிளக்கைத் திருடிச் சென்றனர்.

இதேபோல், எல்லப்பாளையம் என். காஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள பழமையான புது நாட்ராய சுவாமி கோயிலின் கதவையும் உடைத்து, உண்டியலில் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகார்களின் பேரில், ஊதியூர் போலீசார் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிஷ்டி சிங் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய முத்துச்செல்வன் (33), சஞ்சய் (21), தங்கபாண்டி (40), கார்த்திக் (35) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை, பித்தளை குத்துவிளக்கு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *