துறையூர் நவ – 11
திருச்சி மாவட்டம் துறையூரில் பதிவுத்துறையில் புதிய நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் ஆவண எழுத்தர்கள் சார்பில் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘காகிதமற்ற’ பதிவு முறை (STAR 3.0) மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்து, துறையூரில் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆவண எழுத்தர்கள் இரண்டு நாள் (நவ-10 ,11) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது, புதிய பதிவு முறையானது பொதுமக்களின் சொத்துப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும், முறைகேடுகள் மற்றும் மோசடிகளுக்கு வழிவகுப்பதாகவும் ஆவண எழுத்தர்கள் குற்றம் சாட்டினர். இந்த புதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய பதிவு முறையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.மேலும், ஆவண எழுத்தர்களின் பங்களிப்பு இன்றி பதிவு
நடைமுறைகளை மேற்கொள்வது, தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு, தங்களின் தொழில்முறை உரிமைகளைப் பறிக்கும் அபாயத்தை உருவாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
(e-tender) இ.டெண்டர் முறையை ரத்து செய்தல், ஆவண எழுத்தர்களுக்குத் தகுதித் தேர்வுகள் நடத்துதல், நலநிதியத்தின் பயன்களை அதிகரித்தல், தொழில்முறை கட்டணங்களை உயர்த்துதல், ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் தொழில்முறை உரிமைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட கேளிக்கைகளை அவர்கள் முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில், துறையூர் ஆவண எழுத்தர்கள் சங்க உறுப்பினர்கள், முத்திரைத்தான் விற்பனையாளர்கள், உதவியார்கள், வழக்கறிஞர்கள், தட்டச்சர்கள் மற்றும் இத்தொழிலுடன் தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். இதனால் இரண்டு நாட்களிளும் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்