காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே வடக்குப்பட்டு ஊராட்சியில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, அவர்கள் கலந்து கொண்டு 82 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வருவாய் துறை மூலம் ரூ. 60,63,225/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா – 27 பயனாளிகளுக்கும், ரூ.3,06,000/- மதிப்பிலான இயற்கை மரணம் உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை 18 பயனாளிகளுக்கும், மகளிர் திட்டத்தின் மூலம் ரூ.21,00,000/- மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு வங்கிக் கடன் மற்றும் நலிவுற்றோர் நிதி 6 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் ரூ.19,35,200/- மதிப்பிலான முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் மானியம் 2 பயனாளிகளுக்கும், கூட்டுறவு துறை மூலம் ரூ.25,80,000/-மகளிர் சுய உதவிக்குழு கடன் – 7 பயனாளிகளுக்கும் என மொத்தம் 82 பயனாளிகளுக்கு ரூ.1,32,42,925/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா, அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில் கூடுதல் ஆட்சியர், மகளிர் திட்ட இயக்குநர், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் குன்றத்தூர் வட்டாட்சியர், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *