சத்தியமங்கலம்:
தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் மற்றும் பத்திரம் எழுத்தாளர்கள் மாநில கூட்டமைப்பு சார்பில், பத்திரப்பதிவுத் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் அலுவலகங்களை அடைத்து கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
பத்திரப்பதிவுத் துறையில் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், பத்திரம் எழுதுவோர் மற்றும் நகல் எழுதுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சத்தியமங்கலத்தில் உள்ள பத்திரம் எழுதுவோர் அலுவலகங்களை இரண்டு நாட்கள் மூடி வைத்து தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
பத்திரப்பதிவுத் துறையில் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட்டு, இத்துறையைச் சார்ந்து பணியாற்றி வரும் பத்திர எழுத்தாளர்கள் மற்றும் நகல் எழுதுவோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.