மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.வட்டாரவள மேற் பார்வை யாளர் (பொறுப்பு) மஞ்சுளா, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஷர்மிளா பானு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் சாந்தி கலந்து கொண்டார்.


ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். விழாவில் பண்டித ஜவஹர்லால் நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு முதலமைச்சரின் வாழ்த்து அட்டை மற்றும் கேக்கினை வட்டாரக் கல்வி அலுவலர் சாந்தி வழங்கினார். விழாவில் குழந்தைகளுடைய பாட்டு, கவிதை, நடனம், பேச்சு மாறுவேடம், நகைச்சுவை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் ஷகிலாமாய் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் மாலா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *