மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தி, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பின்போது, தொகுதி மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் நலனுக்கும் அத்தியாவசியமான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குதல், தேவையான இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல், பழுதடைந்த சாலைகளைச் சீரமைத்தல், புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் மழைநீர், கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்குத் தேவையான கால்வாய் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தார்.

மேலும், இக்கோரிக்கைகள் அனைத்தும் பொதுமக்களின் நீண்டகாலத் தேவைகளையும் அன்றாடப் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்டவை எனத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து, விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, தொகுதி முழுவதும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *