எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி திருக்கோவில் (கேது ஸ்தலம்).கேது பெயர்ச்சி விழா. திரளான பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.கேது ஸ்தலமான இங்கு நவகிரகங்களில் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
வாசுகி நாகம் மூங்கில் காடாக இருந்த இந்த இடத்தில் சிவனை வழிபட்டதாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால் இது நவகிரகங்களில் கேதுவுக்கு உரிய ஸ்தலமாக விளங்கி வருகிறது.ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு காலம் நின்று பலன் தரக்கூடிய இந்த நிழல் கிரகங்களின் பெயர்ச்சியின் படி கேது பகவான் இன்றுமாலை 5:14 மணிக்கு சிம் ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று இரண்டு கால பூஜைகள் முடிந்து மகா தீபாரதனை நடைபெற்றது.கேது பகவானுக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியப்பொடி, பால்,தயிர்,சந்தனம்,பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மேலதாளம் முழங்க யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கேது பகவானுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேதுபகவான் மாலை 5 மணி 14 நிமிடத்தில் கேது பகவான் சிம் ராசியிலிருந்து கடக ராசிக்கு பிரவேசிக்கும் போது சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.