சென்னை திருவான்மியூரில் 110 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் 22ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள பெரியநாயகி சண்முகம் தோல் நோய் மற்றும் லேசர் மருத்துவமனையில் மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் நிறுவனரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான திரு. சக்திவேல் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவிற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் நிரஞ்சனா பாரதி அவர்கள் தலைமை வகித்தார். தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி காஞ்சனா அவர்கள் முன்னிலை வகித்தார்.

திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவரும், தோல் நோய் மருத்துவருமான டாக்டர் தெட்சிணாமூர்த்தி அவர்கள் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தோல் நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சைகளையும் வழங்கினார்.

இந்த இலவச மருத்துவ முகாமில் மொத்தம் 110 பயனாளிகள் கலந்து கொண்டு, இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *