கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய கிளான்ஸா கார் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதிய டோயோட்டா கிளான்ஸா காரை டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் விகாஸ் தேசாய் அறிமுகம் செய்து வைத்தார்..இந்நிகழ்ச்சியில், முதன்மை நிதி அதிகாரி கண்ணன்,ஐசர் துணை தலைவர் ராஜன் ஆறுமுகம்,ஆனைமலைஸ் டொயோட்டா தலைமை செயல் அதிகாரி யுவராஜன்,துணை தலைவர் சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்..

மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா கிளான்ஸா காரின் சிறப்பம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆனைமலைஸ் டொயோட்டா அதிகாரிகள் பேசுகையில்,

புதிய கிளான்ஸா கார் ஸ்டைலான வடிவமைப்பு, சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில்,ஏழு வண்ணங்களில் அறிமுகமாகி உள்ளதாக தெரிவித்தனர்..
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிறப்பான செயல்திறனையும் சீரான பயண அனுபவத்தையும் வழங்கும் வகையில் கிளான்ஸா மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..

வெளிப்புற வடிவமைப்பில் கவர்ச்சிகரமான முன்பக்க கிரில், எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

உட்புறத்தில் நவீன தொடுதிரை தகவல் அமைப்பு, ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் கீ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.பாதுகாப்பு அம்சங்களிலும் கிளான்ஸா சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. 6 காற்றுப்பைகள், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, ஏபிஎஸ், மின்னணு பிரேக் விசைப் பகிர்வு, பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற வசதிகள், சிறப்பான மைலேஜ், நவீன வடிவமைப்பு மற்றும் வசதியான பயணம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ள புதிய டொயோட்டா கிளான்ஸா, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என தெரிவித்தனர்.மேலும், புதிய டொயோட்டா கிளான்ஸா காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமிற்கு நேரில் வருகை தந்து காரை பார்வையிட்டு, சோதனை ஓட்டம் செய்து அதன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *