பேராவூரணி, நவ.15 –
தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2 பேர் 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான இளையோர் பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-ஆம் வகுப்பு ஏ பிரிவில் பயிலும் கு.காருண்யா, 7-ஆம் வகுப்பு பி பிரிவில் பயிலும் பி.சபர்ணியா ஆகியோர் 2-ஆம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டும் நிகழ்வு பள்ளியில் நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கிப் பாராட்டினார்.இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) ம.காளீஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி எஸ்.மகேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் எஸ்.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புகைப்பட விளக்கம்: மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற பேராவூரணி அரசு மகளிர் பள்ளி மாணவிகள் கு. காருண்யா, பி. சபர்னியா ஆகியோர் பள்ளி ஆசிரியர்களுடன் உள்ளனர்.
பேராவூரணி நீலகண்டன் .