ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே ஈரோட்டை சேர்ந்த அனைத்து சுமை தூக்குவோர் சங்கங்களின் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நூல் ,ஜவுளி கட்டுகள் ஏற்றி இறக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நூல் மற்றும் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினை சேர்ந்தவர்கள் முன் வராமல் இருந்து வருவதாகவும் உடனடியாக கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றும் அதே போல கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் ரெகுலர் லாரி அலுவலகங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கூலி உயர்வு முடிவடைந்துள்ள நிலையில் உடனடியாக கூலி உயர்வு குறித்து பேசி தீர்வு காண வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…