துறையூர் நவ-18
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு துணை சபாநாயகர் ரவிசங்கரை கண்டித்து அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி யாரின் ஆணைக்கிணங்க துறையூர் தொகுதி அதிமுக சார்பில் கழக துணை பொது செயலாளர் கேபி முனுசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசியவர் துறையூர் தொகுதியை சேர்ந்த நபர் தனது பகுதி குறைகளை கூற சென்ற தொகுதி எம்எல்ஏவும் துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கியதை வன்மையாக அதிமுகவின் சார்பில் கண்டிக்கிறோம், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது, கொலை, கொள்ளைகள் நடக்கிறது,

பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் என் யோகநாதன் முன்னிலை வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரத்தினவேல், மனோகரன், கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி மற்றும் துறையூர் நகர செயலாளர் அமைதி பாலு ஒன்றிய செயலாளர் பொன் காமராஜ், என் தனராஜ்,ராம் மோகன், பேரூர் கழக செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜாங்கம்,பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன்,நகர அவைத் தலைவர் ரவிவர்மா, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் கவிதை மணி, மாவட்ட பிரதிநிதி மருதமுத்து, கழக வழக்கறிஞர்கள் கார்த்திகேயன்,செந்தில் குமார், ஏஎஸ் மனோகரன், கண்ணதாசன், மணிவண்ணன், மாவட்ட விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் விஜயரங்கன், பாலசுப்பிரமணியன்,தோசை சின்னசாமி, இளைஞர் அணி விவேக் மற்றும் பல அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *