கோவையில் வாழும் கலை அமைப்பின் சார்பில் குழந்தைகளின் இசைத்திறமையை வெளிப்படுத்துவதுடன், ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவும் நோக்கில் ‘கோரஸ் ஃபார் எ காஸ் – ஒரு தெய்வீக இசை மாலை’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வாழும் கலை அமைப்பின் சார்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்‘கிஃப்ட் எ ஸ்மைல்’ எனும் இலவசப் பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன..
இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் 1,356 பள்ளிகள் செயல்பட்டு வரும் இதில், சுமார் 1.20 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த பள்ளிகளுக்கு நிதி திரட்டும் வகையில், வாழும் கலை அமைப்பின் ‘டீம் கோரஸ் ஃபார் எ காஸ்’ சார்பில், குழந்தைகளுக்காக குழந்தைகளே என்ற கருப்பொருளில் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்த இசை நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் பள்ளியில் நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற இசை நிகழ்ச்சி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் நிர்வாக இயக்குநரும், எஸ்.என்.ஆர். அறக்கட்டளை மற்றும் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலருமான டி. லட்சுமிநாராயணசாமி,குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்..
இதில் திருப்பூர் தங்கம் நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆஷா கிருஷ்ணகுமார், மேக்ஸ்வெல் ஐ.பி. சர்வீசஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் பொம்மி பொம்மணன், வாழும் கலை அமைப்பின் மூத்த ஆசிரியரும் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளருமான சம்பத் ஜி, அபவ்கிளவுட் 9 ஏ.ஐ. நிறுவன நிர்வாக இயக்குநர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்…
தொடர்ந்து வாழும் கலை அமைப்பு, பாரதிய வித்யா பவன், சங்கிருதி இசைப் பள்ளி, சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ஸ்ரீ சம்ஸ்கார் கேந்திரா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது இசைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பஜன் மற்றும் தெய்வீக பாடல்கள் பாடியபடி இசை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்த மாணவர்கள், தங்களது கலைத்திறனை சமூக நலனுக்காகப் பயன்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, இசை, கலை மற்றும் சமூக அக்கறையை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமைந்தது குறிப்பிடதக்கது…