காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் மாற்றுத் திறனாளி பதவியேற்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளிகளின் ஒருவரான தேனீக்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பிச்சைமணி பேரூராட்சி மன்ற புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு புதிய உறுப்பினர் பதவி ஏற்பு விழா பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில்
பேரூராட்சி மன்ற தலைவர் பெ.வேல்முருகன் துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற புதிய உறுப்பினராக பிச்சைமணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் அஹமது பதவி பிரமாணம் செய்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற அனைத்து கவுன்சிலர்கள் தேனீக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் அழகேசன் வேல் மயில் தினேஷ் லட்சுமணன் ஜெகன் போட்டோ பாண்டி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி இளநிலை உதவியாளர் பிரபாகரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *