தேனி: புதுடெல்லியில் நடைபெற்ற ஸ்வச் சர்வேஷன் 2025–2026 (SWACHH SURVEKSHAN) விருது வழங்கும் விழாவில், மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டின் முதல் தூய்மை நகரமாகத் தேர்வு செய்யப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு, இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதினை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வி. சிவகிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சந்தித்த தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் செல்வி எஸ். பார்கவி, மத்திய அரசின் விருதினைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர், நகராட்சியின் இந்தச் சிறப்பான சாதனைக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி மேலாளர் ஜெயந்தி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குக் கிடைத்துள்ள இந்த விருது, நகராட்சியின் தூய்மைப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரமாக அமைந்துள்ளது.