தொழில்முனைவோர் நேர்மையுடன் உழைத்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி பெற வேண்டும் – ஆர்.டி.ஜி. குமரன் பேச்சு

தேனி பிசினஸ் ஃபோரம் (தொழில்முனைவோர்) கம்பம் சேப்டர் சார்பில் மெகா விசிட்டர் (பார்வையாளர்கள்) நிகழ்ச்சி கம்பத்தில் உள்ள ஈட் அண்ட் மீட் கூட்டரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கம்பம் சேப்டர் தலைவரும், ஸ்ரீவாரி பேக்கரி உரிமையாளருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். தேனி பிசினஸ் ஃபோரம் நிறுவனரும், மாஸ்டர் சேப்டி சிசிடிவி நிறுவன உரிமையாளருமான முத்து செந்தில்குமார், மண்டல இயக்குநரும், வைகை கண்ணாடி உரிமையாளருமான லயன் வெங்கடேஷ் பெரியசாமி, முன்னாள் தலைவர் டாக்டர் தியாகராஜன், செயலாளரும், வசந்தம் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளருமான சுல்தான் சையது இப்ராஹிம், பொருளாளரும், ஆல்பா கார் டீடெய்லிங் நிறுவன உரிமையாளருமான விக்னேஸ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னோடி ஏலக்காய் விவசாயியும், அரசியல் பிரமுகருமான ஆர்.டி.ஜி. குமரன் கலந்து கொண்டு பேசுகையில், “தொழில்முனைவோர் குறுக்கு வழியில் முன்னேற நினைக்காமல், உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்து வளர்ச்சி பெற வேண்டும். தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப தொழிலில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம். குறிப்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து விற்பனையை அதிகரிக்க வேண்டும்.

தொழிலில் முன்னேறியவர்கள் தங்களைவிட பின்தங்கிய நிலையில் உள்ள சிறு தொழில்முனைவோரையும் கைதூக்கிவிட்டு, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியைவிட அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவதே உண்மையான தொழில் வளர்ச்சியாகும்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிக்கக்கூடாது. சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்து தொழில் மேற்கொள்ள வேண்டும். தொழில்முனைவோரும், வணிகர்களும் வளர்ச்சி அடையும்போது வேலைவாய்ப்புகள் பெருகுவதுடன் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும். தொழில் மற்றும் வர்த்தகம் வளர்ச்சி அடைவதன் மூலம் அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி வருவாயும் அதிகரிக்கும். எனவே, ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்களது வளர்ச்சியுடன் பிறரது முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான ஏகே குரூப்ஸ் நிறுவன நிறுவனர் ஏ.கே. மைதீன், எம்.ஆர்.வி. வெஜிடெபிள்ஸ் உரிமையாளர் ரேவந்த், எஸ்.கே.பி. இன்சூரன்ஸ் அன்ட் சர்வீஸ் உரிமையாளர் கதிரேசன், எஸ்.எல்.என். (பி) லிமிடெட் உரிமையாளர் முத்துவிஷ்ணு, பிளிக்ஸ் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் நந்தகுமார், சந்திரா சிக்கன் உரிமையாளர் சிவராமன், தேவ் ஏ டூ இசட் பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பூர்ணிமா, எஸ்டீம் பிரஸ் அன்ட் பிளக்ஸ் உரிமையாளர் எஸ்டீம் சிவசங்கர், ஏ.எம்.ஆர். பேட்டரி உரிமையாளர் காஜாமைதீன், ஏகே பேங்க் அன்ட் லோன் அசோசியேட்ஸ் உரிமையாளர் சரவணன், காளியம்மன் போர்வெல்ஸ் உரிமையாளர் சபரிராஜன் மற்றும் தேனி பிசினஸ் ஃபோரம் கம்பம் சேப்டர் உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *