சென்னை

தமிழக வெற்றி கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதி அயனாவரத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் சார்பில் போடப்பட்டிருந்த வாக்காளர் சிறப்பு முகாமில் மாவட்ட கழக செயலாளர் எஸ் கே எம் பூக்கடை குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை மற்றும் கட்சிக்காரர்களுக்கு அறிவுரைகளை
வழங்கினார்.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் தாராபுரா மேல்நிலைப் பள்ளியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் சிறப்பு முகாமை மாவட்ட கழக செயலாளர் எஸ் கே எம் பூக்கடை குமார் பார்வையிட்டு 18 வயது உடையவர்களை எவ்வாறு வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதனை விளக்கியும் அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை கூறி தொடர்ந்து பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான வழிகாட்டுதலையும் ஆலோசனைகளைவழங்கி முகாம்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தார்.

பொதுமக்கள் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு இப்பகுதியில் ஆர்வமுடன் வந்தனர்

வில்லிவாக்கம் கிழக்குப் பகுதி செயலாளர் தளபதி A ரவி முன்னிலையில் நடந்த முகாமில் , 98 (அ) வட்டச் செயலாளர் N. இலியாஸ் . மகளிர் அணி சார்பில் P.நந்தினி பிரபாகரன், அமலா, ஜீவிதா, கவிதா, அனார்கலி, உட்பட பலர் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க களப்பணியில் ஈடுபட்டனர். களப்பணியில் இருந்த அக்கட்சியை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை மாவட்ட கழக செயலாளர் வெகுவாக பாராட்டி ஊக்கப்படுத்தினார்

!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *