தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் தேனி மாவட்ட மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜி . பாலமுருகன் உத்தரவின் பேரில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள் வணிக நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டடங்கள் அரசு அலுவலகங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது
இந்த பேரணியில் காமய கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்று இந்த பேரணி நடைபெற்றது இந்த பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் எம்.ஏ.ஹர்ஷத் தலைமை வகித்தார். பேருராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்
இந்த பேரணி காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி பேரூராட்சியில் பிரதான வீதிகளில் ஊர்வலமாக சென்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நிறைவடைந்தது