திருவாரூர்., நவ .24.-

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைக் கண்டித்து திருவாரூரில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கார்த்திகை தினத்தையொட்டி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் தியாகராஜர் திருத்தேர் அருகே பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் திடீரென ஒன்றுகூடி, கைகளில் அகல் விளக்குகளை ஏந்தியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். “தமிழக மக்களை ஏமாற்றிவிட்டீர்கள், பதவி விலகு, சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தையும் மதிக்கவில்லை” என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து சாலையில் அமர்ந்து கைதட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருக்கார்த்திகை தினத்தையொட்டி சொக்கப்பனை நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்த நிலையில், திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *