காயல் பட்டிணம்: நவ 25

போக்கு வரத்திற்கு இடையூராக சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பறி முதல் செய்வதுடன், உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய பட வேண்டும், என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் உள்ள இ சீ ஆர் சாலைகளில் , மாடுகள் போன்ற கால் நடைகள் சுற்றி திறிந்தும் சாலையை மறித்து படுத்தும் கிடப்பதனால் அவ்வழியாக மோட்டார் பைக்குகள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் செல்லும் பயணிகள் விபத்துகுள்ளாகி கை,கால் முறிந்தும்,படுகாயங்கள் மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன.

மேலும் மாடுகள் விவசாயத்திற்கு மற்றும் பால் கரந்து விற்ப்பனை போன்று தொழில் ரீதியாக பயன் படுத்தி வருகின்றனர். மேலும், மாடுகளின் உரிமையாளர்கள் தனது சொந்த இடங்களில் மாடுகளை கட்டி போட்டு முறையாக பாதுகாக்காமலும், பராமரிக்காமலும் சாலைகளில் விடுவதுனால் சாலை விபத்துகுள்ளாகி பலரும் படுகாயங்கள் மற்றும் உயிரிழந்து வருவதை யார் பொறுப்பேற்று கொள்கிறீர்கள் ? மேலும். மாடுகளால் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுக்க முன் வராமல் ஊராட்சி , பேரூராட்சி , நகராட்சியின்,அரசு அதிகாரிகளின் அலச்சிய போக்கின் விலைவு தான் சாலை விபத்துகள் அரங்கேறி வருகின்றன?

எனவே. இ சி ஆர் போன்ற சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு ஆளான மாடுகளின் உரிமையாளர்கள் முழு பொறுப்பு ஏற்று கொள்வதுடன் சட்ட ரீதியாக அவர்கள் மீது வழக்கும் பதிய பட வேண்டும்,ஆகவே இனி வரும் காலங்களில் மாடுகளால் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உடனடியாக நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும், என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்,என காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *