காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நவம்பர் 26 இந்திய அரசமைப்பு நாள்
சட்டப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லூ. அருள்நாதன் தலைமையில் காஞ்சி மாநகரில் உள்ள
இரயில்வே சாலையில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் மண்டலத் துணைச் செயலாளர் மதிஆதவன், பொருளாளர் திருமாதாசன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் கனகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சத்யா என்கிற இளமாறன், தனகோபி, இர்ஷாத், சுதாகர், கலைச்செல்வி, கவியரசு, ஜெய்சங்கர், மாவட்ட நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பாலாஜி, ஆட்டோ பாட்சா, புத்தேரி ரீகன், சந்துரு, இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலாளர் ஜமுனா கோபிநாத், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலாளர் ரீகன், மாநிலச் செயலாளர் சிறுத்தை சீனு, அம்பி ராஜா, ஒன்றியச் செயலாளர்கள் பாக்குபட்டை சதீஷ், ஈஞ்சம்பாக்கம் தினேஷ், கோனேரிகுப்பம் சுதாகர், தண்டலம் சிலம்பரசன், புத்தேரி விநாயகமூர்த்தி, வேடல் சின்னா , ஜேம்ஸ், பாக்குபட்டை மோகன் மற்றும் கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.