நாச்சியார்கோவில் வர்த்தகச் சங்கத்தில் சுமார் 40 ஆண்டுகளாகத் தலைவராகவும், கும்பகோணம் அல் அமீன் பள்ளி மற்றும் நாச்சியார்கோயில் கிரெஸண்ட் பள்ளி தாளாளராகவும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஜனாப் கே.ஜே.எம்.கமாலுதீன், பி.ஏ., தனது 91-வது வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், வெள்ளிவிழா கண்ட நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கத்தின் சாசனத் தலைவராகவும் இருந்தார்.

நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் லயன் பாலமுருகன் தலைமையில், கடைவீதியில் இருந்து அன்னாரது இல்லம் வரை ஊர்வலமாகச் சென்று இறுதி அஞ்சலியும், புகழஞ்சலியும் செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் வட்டாரத் தலைவர் லயன் எம்.ஜே.ஸ்டீபன் சங்கத்தின் சார்பாக அன்னாருக்குப் புகழ் அஞ்சலி வாசித்தார். மேலும் லயன்ஸ் மாவட்டத் தலைவர்கள், முன்னாள் வட்டாரத் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கத்தின் செயலாளர் லயன் சரவணன் செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *