கோவையில் பிளாஸ்டிக் இந்தியா மற்றும் வேஸ்ட்டெக் இந்தியா கண்காட்சி தொடக்கம் – 80-க்கும் மேற்பட்ட அரங்குகளில் நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தல்!

கோவையில் பிளாஸ்டிக் இந்தியா கண்காட்சியின் இரண்டாவது பதிப்பான PLASTECH INDIA EXPO 2026 மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான WASTETECH INDIA கண்காட்சி கொடிசியா அரங்கில் துவங்கியது…

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் தொடக்க விழாவில், சின்னவேடம்பட்டி தொழில் சங்கத் தலைவர் தேவகுமார், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன், மீடியா டே மார்க்கெட்டிங் இயக்குநர் ராம் சௌந்தல்கர், திட்டத் தலைவர் முகமது முடாசிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன..

பிளாஸ்டிக் உற்பத்திக்கான நவீன இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள், மறுசுழற்சி இயந்திரங்கள், பிளாஸ்டிக் கழிவுகளைத் தரம் பிரித்து கையாளும் கருவிகள், கழிவு சேகரிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணகப்பாளர்கள் கூறுகையில்,, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியாத தற்போதைய சூழலில், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்து மறுசுழற்சி செய்வது அவசியம். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதுடன், தொழில்துறையிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்களைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள் மறுசுழற்சி தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும். இந்தக் கண்காட்சி கோவை தொழில்துறையினருக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும், தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் உதவும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *