தஞ்சாவூர் மாவட்டம் : திருவையாறு வீனஸ் கல்விநிறுவனத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது வீனஸ் கல்வி நிறுவனம் கும்பகோணத்தில் இயங்கி வருகிறது.இந்தக் கிளைகளை தொடர்ந்து, புதிய கிளை இன்று திறக்கப்பட்டது. இது திருவையாறு மேலவிதியில் உள்ள கனரா பேங்க் அருகில் அமைந்துள்ளது.
நிகழ்ச்சியை நிறுவன மணிகண்டன் தலைமை தாங்கினார்.கும்பகோணம் மாநகர் மேயர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன்புதிய கிளையை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதியதாக சேர்ந்த . பயிற்சி வகுப்பிற்கு வந்த மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
. விழாவில், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறுவனர் கூறுகையில், ‘கும்பகோணத்தில் 30 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கிளைகளை தொடர்ந்து, திருவையாற்றில் , நேரடி பயிற்சி வகுப்பிற்காக, புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது..இங்கு அனைத்து பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது. NEET, JEE, TET, TRB, மற்றும் RRB லெவல் முதலான பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்
அறிவு, ஆற்றல் மற்றும் நற்பண்புகளுடன் மாணவர்களை வழிநடத்தி, அவர்களை வருங்கால தலைவர்களாகவும், சாதனையாளர்களாகவும் உருவாகிடத் தேவையான அனைத்து பயிற்சிகள் மற்றும் வசதிகள் செய்து தரப்படும்.என்றார்.